கானே புரையும் கருங்கூந்தற் கவுரி வருக மெஞ்ஞானக் கரும்பேவருக அருள்பழுத்த கனியேவருக தெவிட்டாத தேனே வருக ஆனந்தத் திருவே வருக பெருவேதச் செல்வி வருக எங்கள் குல தெய்வம் வருக உருகுநர்உள் மானே வருக இமயவரை வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசால் திருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே (திருப்புகழ்) மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாசமலர்சிந்து குழல்கோதி வாரிருதனங்கள் பூணொடுகுலுங்க மால்பெருகி நின்ற மடவாரைச் சாலைவழி வந்து போமவர்கணின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறித் தாகமயல் கொண்டு மாலிருளழுந்தி சாலமிகு நொந்து தவியாமல் காலையிலெழுந்து னாமமெமொழிந்து காதலுமைமைந்த எனவோதிக் காலமுமுணர்ந்து ஞானவெளிக்கண்கள் காண அருளென்று பெறுவேனோ கோலமுடனன்று சூர்படையின்முன்பு கோபமுடனின்ற குமரேசா கோதையிருபங்கின் மேவவளர்கும்ப கோண நகர்வந்த பெருமாளே -நிலஞ்சுழியா தோணத்தில் வந்தோனுடன்றுதித்து வாழ்கும்ப கோணத்திற் றெய்வ குலக்கொழுந்தே. (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. கும்பேசுவரர் திருக்கோயில் கும்பகோணம் & அஞ்சல் - 612 001 கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.
தலம் - 31 |