பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 489


அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்’ (புடார்ச்சுனம்) கடைமருது என்றும்
வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இஃது இடைமருது
ஆயிற்று. (அர்ச்சுனம் - மருதமரம்)

    மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் என்பன வேறு பெயர்கள்.
வரகுண பாண்டியனுக்குப் பிரமகத்தி நீங்கிய தலம். (கிழக்குக் கோபுர
வாயிலில் பிரமகத்தி உள்ளது.)

     மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் இத்தலத்தைச் சுற்றிப் பரிவாரத்
தலங்கள் ஒன்பது உள்ளன. அவை :-

    1) விநாயகர் - திருவலஞ்சுழி
    2) முருகன் - சுவாமிமலை
    3) நடராசர் - தில்லை
    4) நவக்கிரகம் - சூரியனார் கோயில்
    5) தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
    6) பைரவர் - சீர்காழி
    7) நந்தி - திருவாவடுதுறை
    8) சோமாஸ்கந்தர் - திருவாரூர்
    9) சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

    திருவாவடுதுறை ஆதீனக்கோயில். ‘திருவிடைமருதூர் தெரு அழகு’
என்பது முதுமொழி.

      இறைவன் - மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர்.
      இறைவி - பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
      தலமரம் - மருது (அர்ஜு னம்)
      தீர்த்தம் - காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்

      தலவிநாயகர்- ஆண்டவிநாயகர் (முதற் பிராகாரத்தில் சுவாமிக்குத்
                                   தெற்கிலுள்ளார்.)

     மூவர் பாடல் பெற்ற தலம். கருவூர்த்தேவர், மாணிக்கவாசகர்,
பட்டினத்தார் பாடல்களிலும் இப்பதி புகழ்ந்து பாடப்படுகிறது.

     பெரிய கோயில். நான்கு பிராகாரங்கள். வீதியையும் சேர்த்தால்
பிராகாரம் ஐந்தாகும். வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம் “அஸ்வமேத
பிராகாரம்”
எனப்படும். இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம்
வரலாம். இப்பிராகாரத்தை வலம் வந்தால் பேய்,