பக்கம் எண் :

498 திருமுறைத்தலங்கள்


151/34. திருநல்லம்

கோனேரிராஜபுரம்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    (1) கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப்பாதையில் ‘ S. புதூர்
அடைந்து, அங்கிருந்து வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில்
(கோனேரி ராஜபுரம் என்று வழிகாட்டி உள்ளது) சென்று கோனேரி ராஜபுரம்
கூட்ரோடினையடைந்து, (கூட்ரோடில் பெயர்ப் பலகையில்லை -
ிசாரித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்) அங்கிருந்து இடப்புறமாகப்
பிரிந்து ஊருக்குள் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் ஊரையடையலாம்.

    (2) பேருந்தில் செல்வோர் கும்பகோணம் - வடமட்டம், ஆடுதுறை -
வடமட்டம் செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று கோனேரி ராஜபுரம்
கூட்ரோடில் இறங்கி 1 கி.மீ. நடந்து சென்று ஊரையடையலாம். கண்டராதித்
தன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணி பெற்ற தலம். ஊர்
செழிப்பாகவுள்ளது. “நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர்” என்னும்
ஞானசம்பந்தரின் வாக்குக்கேற்ப அந்தணர்கள் மிகுதியாக, வளத்தோடு
வாழ்கின்ற ஊராகத் திகழ்கின்றது. கோயில் ஊர்த் தொடக்கத்திலேயே
உள்ளது.

    இறைவன் - உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
    இறைவி - தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
    தலமரம் - அரசு
    தீர்த்தம் - பிரமதீர்த்தம்.

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

    ஊருக்குள் நுழையும்போதே கோயில், எதிரில் தீர்த்தத்துடன்
காட்சியளிக்கின்றது. மேற்கு நோக்கிய சந்நிதி. குளக்கரையில் தலமரம் ‘அரசு’
உள்ளது. முகப்பு வாயில், தாண்டி உள்சென்றால் நீண்ட முன்மண்டபம்
உள்ளது. இதன் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர்,
சிவமூர்த்தம், பன்னிரண்டுராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள்
அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.

    கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி, பலிபீடம்
உள்ளன. பிராகாரத்தில் சண்முகர் சந்நிதி. இடப்பால் உள்ள வழியாகச்