பக்கம் எண் :

500 திருமுறைத்தலங்கள்


                                        - பாடச்சீர்
    வல்லதமிழ்ப்புலவர் மன்னிவணங்குதிரு
    நல்லம் மகிழ்இன்ப நவவடிவே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

   
அ/மி. பூமீஸ்வரர் திருக்கோயில்
    (உமாமகேஸ்வரர்)
    கோனேரி ராஜபுரம் & அஞ்சல் - கும்பகோணம் RMS 612 201
    தஞ்சை மாவட்டம்.

152/35. திருக்கோழம்பம்

திருக்குழம்பியம்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    மக்கள் வழக்கில் திருக்குழம்பியம் - திருக் கொழம்பியம் என்று
மாறியுள்ளது.

     கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள “எஸ். புதூர்” வந்து, அங்கிருந்து திருக்குழம்பியத்திற்குச் செல்லும்
தனிப்பாதையில் சென்றால் கோயிலையடையலாம். நரசிங்கன் பேட்டை
யிலிருந்தும் வரலாம். S. புதூருக்கு வடக்கில் 1 கி.மீ. தொலைவு.

     பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட மூர்த்தி இவராதலின்
“கோகிலேசுவர்” என்று பெயர் வந்தது.

    திருக்கொளம்பியம் - திருக்கோழம்பம் என்று திரிந்து அதுவும் மாறி
இன்று வழக்கில் திருக்குழம்பியம் என்றாயிற்று.

    அம்பிகை பசு வடிவங்கொண்டு, சாபநீக்கங்கருதிப் பல தலங்களையும்
வழிபட்டவாறே திருவாவடுதுறைக்கு வரும்போது இத்தலத்தையும் அடைந்து
வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. இந்திரன் வழிபட்ட தலம்.

    இறைவன் - கோகிலேசுவரர், கோழம்பநாதர்
    இறைவி - சௌந்தர நாயகி