- இல்லமயல் ஆழம்பங் கென்ன அறிந்தோர் செறிந்தேத்துங் கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. கோகிலேசுவரர் /கோழம்பநாதர் திருக்கோயில் திருக்கொழம்பியம் - எஸ். புதூர் அஞ்சல் (வழி) கும்பகோணம் - RMS - 612 205 திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம். சோழநட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம். சாலையில் ஆதீன வளைவு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அருகிலுள்ள இருப்புப்பாதை நிலையம் நரசிங்கன் பேட்டையாகும். இறைவி பசுவடிவில் வழிபட்ட பதி. ஆதீனமும் கோயிலும் ஒன்றையொன்று அடுத்துள்ளன. |