பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 503


     1) ஞானசம்பந்தர், தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம்
பொற்கிழி பெற்றது; (2) சுந்தரர் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது; (3)
திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது;
(4) தேவர்கள் ‘படர் அரசு’ ஆக விளங்க அதன்கீழ் இறைவன்
எழுந்தருளியது; (5) திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம்
அருளியது; (6) போக சித்தருடைய மாணவராகிய திருமாளிகைத்தேவர் பல
அற்புதங்களை நிகழ்த்தியது; (7) சேரமான் பெருமாள் நாயனார், விக்ரம
பாண்டியன் ஆகியோர் வழிபட்டது; (8) முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி
இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டியது
(புத்திரத் தியாகேசர்) (9) சித்தர்க்கு அட்டமா சித்திகளை அருளியது;
(10) தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு
பெற்றது; (11) திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய
சமாதிகள் இருப்பது முதலிய எண்ணற்ற சிறப்புக்களையுடைய தலம்.

     இங்குள்ள நந்தி மிகப் பெரியது. இறைவன் வீரசிங்க ஆசனத்திருந்து
சுந்தர நடனம் ஆடி மகாதாண்டவம் புரிந்த தலமும் இதுவே. கோமுக்தி நகர்,
அரசவனம், முத்தி க்ஷேத்ரம், கோகழி, சிவபுரம், பிரமபுரம், அகத்தியபுரம்,
தருமநகர், கஜாரண்யம், நந்திநகர், நவகோடி சித்திபுரம் முதலியன
இத்தலத்தின் வேறு பெயர்கள்.

    ஆ+அடுதுறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர்.
சமஸ்கிருதத்தில் கோமுக்திபுரம் எனப்படும்.

     இறைவன் - மாசிலாமணீசுவரர், கோமுக்தீஸ்வரர்
     இறைவி - ஒப்பிலாமுலையம்மை, அதுல்யகுஜாம்பிகை
     நந்தி - தருமநந்தி
     தலமரம் - படர் அரசு

     தீர்த்தம் - கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்

     தலவிநாயகர்- துணைவந்த விநாயகர்

     மூவர் பாடல் பெற்றது.

    கோயில் கிழக்கு நோக்கியது. எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது.
பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள்.
இரண்டாங் கோபுர வாயிலில் பெரிய நந்தியுள்ளது. பின்னால் உள்ள
பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்.

    அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் நவக்கிரகம்
இல்லை. தியாகேசர் கோயில் உள்ளது. தியாகேசர்,