பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 505


              க்ஷேத்ரக் கோவை பிள்ளைத்தமிழ்

    
தேவாதி தேவன்சொல்வேதாக மங்களைத்
          திருமந்த்ர மாலையென்றே
     திகழ்சமா தியிலிருந் துலகத்து ளருள்விழி
          திறந்தாண் டினுக்கொன்றெனும்
     பாவாக வேசொன்ன பரமசிவ னானகுரு
          பணியோக அட்டாங்கமும்
     பகர்வரியசித்தியுந் திரிகால ஞானமும்
          பரிபக்கு வர்க்கருளுவோன்
     சேவேறுமொரு வனே பரமதத் துவமெனுந்
          திருமூல நாதன்மகிழ்வூர்
     திருவிசைப் பாவென்னும் அதிமதுர கவிபாடு
          திருமாளி கைத்தேவர் வாழ்
     காவேரி சூழ்ந்ததிரு வாவடுது றைக்குமர
          கனிவாயின் முத்தமருளே
     கங்கா நதிச் சரவணத்துவளர் காங்கேய
          கனிவாயின் முத்தமருளே.

அஞ்சல் முகவரி:-

   
அ/மி. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
    திருவாவடுதுறை & அஞ்சல் - 609 803
    (வழி) நரசிங்கன் பேட்டை மயிலாடுதுறை RMS.
    நாகப்பட்டினம் மாவட்டம்.

154/37. திருத்துருத்தி

குத்தாலம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ‘குத்தாலம்’ என்று வழங்குகின்றது. மயிலாடுதுறை -
கும்பகோணம் இருப்புப்பாதையில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை முதலிய நகரங்களிலிருந்து இத்தலத்திற்குப்
பேருந்து வசதிகள் உள்ளன. ஆற்றிடைக் குறையாகவுள்ள தலங்களுக்குத்
‘துருத்தி’ என்று பெயர் வழங்கப்படுகின்றது. இத்தலமும் ஆற்றிடைக்குறையில்
அமைந்துள்ளதால் இப்பெயர் (துருத்தி) பெற்றது. முன் இருபுறம் சென்ற
காவிரி தற்போது கோயிலின்