வடபுறம் ஓடுகின்றது. ஒருவகை ஆத்திமரம் - ‘உத்தால மரம்’ தல விருட்சமாதலின் இத்தலம் ‘உத்தாலவனம்’ என்று பெயர் பெற்றது. இதுவே மருவி ‘குத்தாலம்’ என்றாயிற்று. இறைவன் - உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார். இறைவி - அமிர்த முகிழாம்பிகை, மிருது முகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வன முலையாள் (ம்ருதமுகுளஜாம்பிகை) தலவிநாயகர்- துணைவந்த பிள்ளையார். தீர்த்தம் - 1. காவிரி, 2. சுந்தர தீர்த்தம், 3. வடகுளம் (பத்ம தீர்த்தம்) முதலியன. தலமரம் - உத்தால மரம் (ஆத்தியில் ஒருவகை) மூவர் பாடல் பெற்ற தலம். சுந்தரருக்கு உண்டான உடற்பிணி இத்தலத்தீர்த்தத்தில் (சுந்தர தீர்த்தத்தில்) நீராட நீங்கியது. தீர்த்தக்கரையில் சுந்தரர் கோயில் உள்ளது. ஐயடிகள் காடவர்கோன் இத்தலத்தைப் பாடியுள்ளார். மேற்கு நோக்கிய சந்நிதி. திருக்கோயில் ஊரின் நடுவில் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. இரு பிராகாரங்கள். இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். தனித் தனிக்கோயில்கள். இராசகோபுரம் மேற்கு வாயிலாக உள்ளது. இறைவனைப் பூசித்த அம்மைக்குக் காட்சிதந்த இறைவன் அம்பிகையின் கரம் பற்ற; அம்பிகை, தன் பெற்றோர் மகிழ விதிமுறைப்படி மணங்கொள்ளுமாறு வேண்டினார். இறைவனும் அதற்கிசைந்து ‘நாமே விதித்த விதியின்படி நடந்து உம்மை மணங்கொள்வோம்’ என்று அருள்புரிந்தார். இதனால் இறைவனுக்கும் ‘சொன்னவாறு அறிவார்’ என்று பெயர் வந்தது. உமையை மணந்துகொள்ள வந்தவடிவம் ‘மணவாள நாதர்’. பாதுகையாக வந்த வேதமே - குடையே - உத்தாலமரமாயிற்று. தலவிருட்சத்தின் அடியில் ‘பாதுகை’ வடிவில் உள்ளது. இதன் எதிர்புறத்தில் - உமையம்மை, திருமணத்திற்கெனக் கோலங்கொண்ட திருமேனியாகிய ‘நறுஞ்சாந்திளமுலை அம்மை’ உருவம் உள்ளது. அம்பிகையை மணந்து கொள்ளவந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் - ‘துணைவந்த விநாயகர்’ - இவரே தலவிநாயகர். இச்சந்நிதி, ‘சொன்னவாறு அறிவார்’ சந்நிதியிலுள்ளது. உமை வழிபட்டதும்; |