பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 507


வருணன் வழிபட்டுச் ‘சலோதரம்’ என்னும் பிணி நீங்கியதும்; காளி
வழிபட்டுப் பேறு பெற்றதும் தலச்சிறப்பாகும். மற்றும் காசிபன், ஆங்கிரசன்,
கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய
சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

    கார்த்திகை ஞாயிறு நாள்கள் இத்தலத்தில் விசேஷம். சூரியன் -
கதிரவன் வழிபட்டுத் தவஞ்செய்த இடம் கதிராமங்கலம் என்றழைக்கப்
படுகின்றது. “ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் புலம்பித் திகழுமா காவிரி”
ஆலயத்தின் வடபால் ஓடுகின்றது. மற்றதாகிய சுந்தர தீர்த்தம் - பதும
தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். இது ஆலயத்தின் வடமேற்கிலுள்ளது.
இவை தவிர, இத்தலத்தைச் சுற்றிலும் அக்கினி தீர்த்தம், காளி தீர்த்தம்,
புண்டரீக தீர்த்தம், காம தீர்த்தம், கதிரவ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்
முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருவாவடு
துறை, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, சூரியனார் கோயில், கதிரா
மங்கலம், திருமணஞ்சேரி, திருப்பந்தணை நல்லூர், திருவேள்விக்குடி முதலிய
தலங்கள் உள்ளன. ஆலயத்துள் அலங்காரமண்டபமும், காவிரிக் கரையில்
தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன.

    இத்திருக்கோயில் தருமையாதீனத்திற்குச் சொந்தமானது. நாடொறும்
காரண, காமிக ஆகமங்களின் முறைப்படி பூசைகள் சிறப்பாக
நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலம் ‘வீங்குநீர் திருத்துருத்தியுடைய
மகாதேவர்’, உடையார் சொன்னவாறறிவார்’, ‘திருக்கற்றளி மகாதேவர்’ என்று
குறிக்கப்படுகிறது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களால் - திருத்துருத்திப் புராணம் பாடப்பட்டுள்ளது. நாடொறும்
ஐந்து கால பூஜை.

   
“துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
     மறக்கு மாறிலாதஎன்னை மையல்செய்து இம்மண்ணின்மேல்
     பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட்(டு)
     இறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே”
                                               (சம்பந்தர்)

    “அள்ளலைக்கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்
     பொள்ளலிக் காயந்தன்னுள் புண்டரீகத்திருந்த
     வள்ளலை வானவர்க்குங் காண்பரிதாக நின்ற
     துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.”
                                                (அப்பர்)