பக்கம் எண் :

508 திருமுறைத்தலங்கள்


    “மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்தருவி
           வெடிபடக் கரையொடுந் திரை கொணர்ந்தெற்றும்
     அன்னமாங் காவிரி யகன்கரை யுறைவார்
           அடியிணை தொழுதெழு மன்பராமடியார்
     சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்
           குடியுளாரடிகளைச் செடியனேன்நாயேன்
     என்னைநான் மறக்குமாறெம் பெருமானை
           யென்னுடம்படும்பிணி இடர்கொடுத்தானே”   (சுந்தரர்)

     “உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
      கருத்திருத்தி ஊன்புக்குக்கருணையினால் ஆண்டுகொண்ட
      திருத்துருத்திமேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
      அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே”
                                              (திருவாசகம்)

    “வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
     குஞ்சி குறங்கின் மேல்கொண்டிருந்து - கஞ்சி
     அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
     திருத்துருத்தி யான் பாதஞ் சேர்”
                                   (ஐயடிகள் காடவர்கோன்)

                                        “-பேராங்
    கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க்கருள் செய்
    திருத்துருத்தி யின்பச் செழிப்பே.”     (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

    அ/மி. உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்
    குத்தாலம் & அஞ்சல் - 609 801
    மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.