வலமாகப் பிரகாரத்தில் வரும்போது, சேக்கிழார் உள்ளிட்ட நால்வர் சந்நிதி உள்ளது. அடுத்து, வல்லபை விநாயகர் தரிசனம், பக்கத்தில் மீனாட்சி சொக்கநாதர் சந்நிதியும் அடுத்துத் தலமரத்தின் சிலா ரூபமும், இரு சிவலிங்கங்களும் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் உற்சவத் திருமேனிகளின் பாதுகாப்பு இடம் பெற்றுள்ளது. நால்வர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர் முதலிய உற்சவத்திருமேனிகள் சிறப்பானவை. கஜலட்சமி சந்நிதியை அடுத்து, முருகப்பெருமான் தரிசனம் வள்ளி தெய்வயானையுடன் கூடி, மயிலின் முகம் திசைமாறியுள்ளது. சண்டேசுவரருக்கு எதிரில் நவக்கிரகங்கள் தத்தம் வாகனங்களுடன் உள்ளன. நடராஜ சந்நிதி அழகாக உள்ளது. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை. அடுத்துள்ள சந்நிதியில் மட்டுமே சண்டேசுவரர் உள்ளார். கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. மாசிமகத்தில் தாலபுரீசுவரருக்குப் பெருவிழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவார உற்சவம் கிருபாநாதேசுவரருக்கு விசேஷம் நவராத்திரி சஷ்டி உற்சவங்கள் நடைபெறுகின்றன. கோயிலுள், பக்கத்துக்கு ஒன்றாக இருபுறமும் இரு பனைமரங்கள் உள்ளன. ஒரு மரத்தின் விதையிலிருந்து முளைத்த போதிலும் இவ்விரண்டுள் ஒன்று ஆண் பனையாகவும் மற்றொன்று பெண் பனையாகவும் உள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன. கோயில் மதிலில் புறாக்கள் நிரம்ப உள்ளன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில : (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. (2) உள் |