- “இளமைச் செறியலூர் கடந்தற் றிருவனையாராடும் பறியலூர் வாழ் மெய்ப்பரமே” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்ப்பரசலூர் - பரசலூர் அஞ்சல் - 609 309. (வழி) செம்பனார் கோயில் தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். 159/42. திருச்செம்பொன்பள்ளி செம்பனார் கோயில் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் செம்பனார் கோயில் என்று வழங்குகின்றனர். 1) மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் உள்ளது. 2) மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. 10 கி.மீ. தொலைவு. இறைவன் - சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர், சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பள்ளியார். இறைவி - மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி. தீர்த்தம் - சூரிய தீர்த்தம், காவிரி தலமரம் - வன்னி, வில்வம் (சுவாமி அம்பாள் சந்நிதிகளிடையே வன்னியும் வடக்குச் சுற்றில் வில்வ மரமும் உள்ளன.) சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது. வசிட்டர், அகத்தியர், பிரமன், இந்திரன், குபேரன் வழிபட்ட தலம். |