பக்கம் எண் :

522 திருமுறைத்தலங்கள்


     சொல்லப்படுகிறது. இந்நாள்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு
நடைபெறுகிறது.

     இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன.
இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை
சரபோஜி மன்னர் காலத்தியவை.

     நவக்கிரக தோஷத்திற்கு இத்தல வழிபாடு சிறந்த பரிகாரமாக இன்றும்
சொல்லப்படுகிறது. இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின்
பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது
இக்கோயில் கி.பி. 879-907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன்
செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்னும் செய்தி இவ் ஆலயத்
தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத்
திட்டத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 24.6.1999ல் கும்பாபிஷேகம்
நடந்துள்ளது.

     இத்தலத்தில் துர்க்கை வழிபாடு விசேஷமானது.

     இவ்வூரில் 8.2.1965ல் தோற்றுவிக்கப்பட்ட ‘மணிவாசக மன்றம்’ மிகச்
சிறப்பான தெய்விகப் பணிகளைச் செய்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக
வெள்ளிக்கிழமை தோறும் வார வழிபாடு மன்றம் வாயிலாக நடைபெறுகிறது.
நால்வர் பெருமக்களின் குருபூஜைகளை நடத்துதல், மணிவாசகர் குரு
பூஜையைச் சிறப்பாக ஆண்டு விழாவாகக் கொண்டாடுதல், பள்ளிக் குழந்தை
கட்குப் பரிசளித்தல், தல வரலாறு பதிகங்கள் வெளியிடுதல், தலயாத்திரை
மேற்கொள்ளல் முதலிய பணிகளை மன்றம் சிறப்பாகச் செய்து
வருகிறது. இம் மன்றத்தின் பெரும் முயற்சியால் செம்பொன்பள்ளிக்
குடமுழுக்கு 24.6.1999ல் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து
பிரதோஷ வழிபாடும் - நடராசர் அபிஷேகங்களும்- கார்த்திகைச் சோமவார
வழிபாடுகளும் நன்கு நடைபெற்று வருகின்றன. இம்மன்றத்தின் செயலர்
கவிக்குரிசில் “தென்னவன்” என்று புகழப்படும் திரு. சி. தட்சிணாமூர்த்தி
அவர்கள் “மருவார் குழலி விருத்த மணி மாலை” பாடி அதை மன்றம்
1978ல் வெளியிட்டுள்ளது.

      ‘செம்பனார் கோயில் மணி வாசக மன்றம்’ அப்பகுதியில் மிகச்
சிறந்த பணிகளைச் செய்து வருகிறது. மன்ற அன்பர்களின் மேலான
ஒத்துழைப்பு பாராட்டப்பட வேண்டியதாகும். பேராசிரியர் திரு.தா.மா.
வெள்ளைவாரணம் அவர்கள் சிறப்புத் தலைவராக இருந்து