‘சிலம்பில்’ வரும் நடன மகள் ‘மாதவி’யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது. பக்கத்தில் உள்ள பிற தலங்கள் திருஆக்கூரும் திருத்தலைச் சங்காடும் ஆகும். “பண்பொலி நான்மறை பாடியாடிப் பலவூர்கள் போய் உண்பலி கொண்டுழல் வானும் வானின்ஒளி மல்கிய கண்பொலி நெற்றி வெண்திங்களானும் கடவூர்தனுள் வெண்பொடிப் பூசியும் வீரட்டானத்தரன் அல்லனே.” (சம்பந்தர்) “பெரும் புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி அரும் பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பி நல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே." (அப்பர்) “பொடியார் மேனியனே புரிநூலொருபால் பொருந்த வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்துஎம் அடிகேள் என் அமுதே எனக்கு ஆர்துணை நீயலதே." (சுந்தரர்) “என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின் நின்குறையே யன்றி யார் குறைகாண் இருநீள் விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே. (அபிராமி அந்தாதி) “கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழு பிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் |