பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 537


     அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
          ஆதிகடவூரின் வாழ்வே
     அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
          அருள்வாமி அபிராமியே.”
                       (அபிராமியம்மைப் பதிகம்)
                     
                                      -“மாறகற்றி
     நன்கடையூர் பற்பலவும் நன்றி மறவா தேத்துந்
     தென்கடையூர் ஆனந்தத் தேறலே.”      (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
     திருக்கடையூர் & அஞ்சல் - 609 311
     மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

165/48. திருக்கடவூர் மயானம்

திருமயானம்.

திருமெய்ஞ்ஞானம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் இத்தலத்தை ‘திருமெய்ஞ்ஞானம்’, ‘திருமயானம்’ என்று
வழங்குகின்றனர். திருக்கடவூருக்கு நேர்கிழக்கில் 2 கி.மீ. தொலைவில்
உள்ளது. கோயில்வரை பேருந்து, கார் செல்லும். மயிலாடுதுறை -
வேப்பஞ்சேரி நகரப்பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. கோயிலைச்
சுற்றிச் சில வீடுகளே உள்ளன. சிவபெருமான் பிரமனை நீறாக்கி, மீண்டும்
உயிர்ப்பித்து, அவருக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலம். பிரமன்
வழிபட்ட தலம். பழைமையான கோவில். போதிய பராமரிப்பு இல்லை.
கோயிலுள் உள்ள மூர்த்திகளும் மிகப் பழைமையானவை. ஒருசில
பழுதடைந்தும் உள்ளன.

     இறைவன் - பிரமபுரீசுவரர்.
     இறைவி - மலர்க்குழல் மின்னம்மை. அம்மலக்குஜ நாயகி. பழைய
             நூலில் ‘அமலக்குய மின்னம்மை’ என்று
              குறிக்கப்பட்டுள்ளது.
     தீர்த்தம் - காசி தீர்த்தம்