“பாசமான களைவார் பரிவார்க் கமுத மனையார் ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் பேசவருவார் ஒருவர் அவர் எம் பெருமான் அடிகளே.” (சம்பந்தர்) “குழைகொள் காதினர் கோவண ஆடையர் உழையர்தாங் கடவூரின் மயானத்தார் பழையதம் அடியார் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே.” (அப்பர்) “நறைசேர் மலர் ஐங்கணையானை நயனத்தீயாற் பொடிசெய்த இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லையென்னாது அருள்செய்வார் பறையார் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில்கடவூர்ப் பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமானடிகளே.” (சுந்தரர்) “உய்யும் மருந்து இதனை உண்மின் என உற்றார் கையைப் பிடித்தெதிரே காட்டியக்கால் - பைய எழுந்து இருமியான் வேண்டேன் என்னாமுன் நெஞ்சே ! செழுந்திரு மயானமே சேர்.” (ஐயடிகள் காடவர்கோன்) - வன்மையிலாச் சொற் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும் நற்கடவூர் வீரட்ட நாயகனே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பிரமபுரீசுவரர் திருக்கோயில் திருக்கடையூர் மயானம் திருக்கடையூர் அஞ்சல் - 609 311 மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |