பக்கம் எண் :

54 திருமுறைத்தலங்கள்


     இவ்வூரில்   உள்ள ‘ஆரூரான்  வழிபாட்டு  மன்றம்’   சோமவார
வழிபாட்டைச் சிறப்புற நடத்தி வருகின்றது.

     இவ்வூருக்குப்   பக்கத்தில்  உள்ள   வெம்பாக்கத்திலிருந்து  5 கி.மீ.
தொலைவில் ‘அழிவிடைதாங்கி’ என்னும் கிராமத்தினைச் சேர்ந்த  பகுதியாக
‘பைரவபுரம்’ என்னும் மேட்டூர் உள்ளது. இங்குப் பைரவருக்கு கருவறை, மகா
மண்டபம், பிராகாரத்துடன் கூடிய தனிக்கோயில் உள்ளது.

    “விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
     அடையில் அன்புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா
     மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
     சடையிற் கங்கைதரித்தானைச் சாராதார் சார்வென்னே.”
                                               (சுந்தரர்)

     “பனங்காட்டூர் மேவும் பனங்காட்டூர் நாதா
     வனங்காட்டமுதவல்லி மன்னா”
                                   (சிவ நாமக்கலி வெண்பா)
                         -“பூத்தவிசின்

     ஆர்த்தான் பனாகத்தவனிந்திரன் புகழ்வன்
      பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே.”
                                           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

  அ/மி. தாலபுரீஸ்வரர் திருக்கோயில்
     
திருப்பனங்காடு & Post (வழி) வெம்பாக்கம் - 604 410.
   செய்யாறு வட்டம் - திருவண்ணாமலை மாவட்டம்.

10. திருவல்லம்

திருவலம்

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள்   வழக்கில்   ‘திருவலம்’   என்று    அழைக்கப்படுகின்றது.
வேலூருக்குப் பக்கத்தில் உள்ள காட்பாடிக்கு அண்மையில் உள்ள இருப்புப்
பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை