பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 541


வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை.
வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். சோமாஸ்
கந்தர், பிரதோஷநாயகர் திருமேனிகளும் நன்றாக உள்ளன. கோயில் நல்ல
பராமரிப்பில் உள்ளது. நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் மாசி மகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. மாசிமகத்தன்று
திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல்
நீராடுகிறார். இது ‘கடலாடுவிழா’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண
வரலாறு கூறுவதால் இக் ‘கடலாடு விழாவை கடலோர ஊர்களில்
(அக்கம்பேட்டை, மண்டபத்தூர், காளிக்குப்பம்) வாழும் மீனவர்கள் ஏற்று
நடத்துகிறார்கள். மாசிமகத்தில் இக்கோயில் இத்தீர்த்தத்தில் நீராடுவது
சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

    
 “தோத்திரமா மணலிலிங்கம் தொடங்கி ஆனிரையின் பால்
     பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
     ஆத்தமென மறை நால்வர்க் கறம்புரி நூலன்றுரைத்த
     தீர்த்த மல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே.”   (சம்பந்தர்)

     “உருமேனி பலவகையென்றுரைத் திடினு மறிவுறலால்
     கருமேனி யுடையரென்றுங் கனகம்பால் செம்பவள
     தருமேனி யுடையரென்றுஞ் சாற்றருள் கூருருவருவாந்
     திருமேனி யழகர்தாள் சிந்தனைசெய் தேத்துவாம்.” (தலபுராணம்)

    “சங்குவளைக் கரத்தாளைச் சராசரமெலாமீன்ற தாயை நீரில்
    தங்குவளைச் செவியாளைச் சைவல மாங் சூழலாளைத்
                                           தாழ்வில்லாளைப்
    பொங்குவளைப் புயத்தாளைப் பொருப்பரையன் அளித்தருளும்
                                          புதல்வி தன்னை     அங்குவளை விழியாளை அரனிடத்தில் அமர்வாளை
                                        அன்பிற்றாழ்வாம்.”
                                             (தலபுராணம்)
                             - வற்கடத்தும்
     வாட்டக்குடி சற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
     வேட்டக்குடிமேவு மேலவனே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-      

    
அ/மி. சுந்தரேசுவரர் திருக்கோயில்
     திருவேட்டக்குடி - வரிச்சிகுடி அஞ்சல்
     (வழி) கோட்டுச்சேர் - 609 610
     காரைக்கால் வட்டம் - புதுவை மாநிலம்.