பக்கம் எண் :

542 திருமுறைத்தலங்கள்


167/50. திருத்தெளிச்சேரி

காரை- கோயில்பத்து

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     தற்போது கோயில் பத்து என்று வழங்குகிறது. காரைக்கால் நகரில் ஒரு பகுதியில் உள்ளது. (பாரதியார் சாலை வழியே சென்று கோயிலை யடையலாம்.) இதற்கு “சமீவனம்” என்று பெயர். சிறிய கோயில், மேற்கு பார்த்த சந்நிதி.

     இறைவன் - பார்வதீஸ்வரர், பார்ப்பதீஸ்வரர், சமீவனேஸ்வரர்.
     இறைவி - பார்வதியம்மை, சத்தியம்மை, சுயம்வர தபஸ்வினி.
     தலமரம் - வில்வம், வன்னி.
     தலவிநாயகர்- சம்பந்த விநாயகர்.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இத்தலம், தவம் செய்வதற்கு உகந்த இடம் என்பது புராண வரலாறு.
இதற்குப் பிரமவனம், முத்திவனம் என்றும் பெயர்களுண்டு. பிரமன் வழிபட்ட
தலம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம். இக்கோயில்
அழகானது. கற்கோயில். ஐந்து நிலைகள் கொண்ட பெரிய ராஜகோபுரம்.
மேற்கு நோக்கிய வாயில்.

     சிவசுப்பிரமணியர், இலக்குமி, துர்க்கை, சூரியன், சனீஸ்வரர், பைரவர்,
வன்னிலிங்கம், தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, அறுபத்துமூவர் சந்நிதிகள்,
லிங்கோற்பவர், நடராசர் முதலிய பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் உள்ளன.
பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சந்நிதி விசேஷமானது. கோயிலின்
பிரதான உற்சவமூர்த்தி கிராத மூர்த்தி (வேடவடிவம்) ஆகும்.

     இங்குள்ள தீர்த்தங்கள் :- சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம்
முதலியன. இவற்றுள் சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிறு நாள்களில்
வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

     இங்குள்ள இலிங்க மூர்த்தி, பிரமன் வழிபட்டதால், மகாலிங்கம்,
பிரம்மலிங்கம் என்றும் ; அம்பரீஷனால் வழிபடப்பட்டதாதலின் ராஜலிங்கம்
என்றும் ; சூரியனும் வழிபடப்பட்டதாதலின் பாஸ்கரலிங்கம் என்றும்
அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சோமவார (திங்கட்கிழமை)