வழிபாடு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அம்பாள் திருவுருவம் அழகானது. இக்காரைக்காலில், “காரைக்காலம்மையார்” கோயில் தனியே உள்ளது. சென்று தரிசிக்க வேண்டும். “திக்குலாம் பொழில் சூழ் தெளிச்சேரி யெஞ்செல்வனை மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித் தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.” (சம்பந்தர்) குறையாத செல்வமும் நிறைவான கல்வியும் கோடாத ஞான வொளியும் குன்றா ஒழுக்கமும் பொன்றாத பொறுமையும் குணமான இனிய முகமும் கறையிலா உள்ளமும் கபடிலா மாற்றமும் கண்ணோட்ட மிகவு டைமையும் கலையா முயற்சியும் அலையாப் பயிற்சியும் காய்தலொ டுவத்த லின்றி முறையாக ஆய்தலும் நீதிதவ றாதநன் முடிவு தரு நற்கு ணங்கள் மூடனேற் கென்றென்றும் அமைய அருள்புரிகுவாய் முடிவிலா ஆற்ற லுடையாய் ! செறிதருங் கன்னலது கமுகென வளர்ந்திடும் தெளிச்சேரி தனில்வி ளங்கும் செப்பரிய பார்வதீச் சுரரிடப் பாலமர் சிவசக்தி யம்மை யுமையே ! (சுயம்வர தபஸ்வினி விருத்தம்) - நாட்டமுற்ற வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநல மாக்குந் தெளிச்சேரியங் கணனே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பார்வதீஸ்வரர் திருக்கோயில் கோயிற்பத்து - காரைக்கால் & அஞ்சல் - 609 602 புதுவை மாநிலம் |