பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 545


     முகப்பு வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வலத்தில்
விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகளும், தலமரம் வாழையும்
நவக்கிரகங்களும் உள்ளன. வலமுடித்துப் படியேறி சென்றால் மூலவர் சந்நிதி.
யாழ்முரிநாதர் தரிசனம் - சிறியபாணம் - நாகாபரணம் சார்த்தப்பட்டு
அழகாகக் காட்சி தருகின்றார்.

     கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி,
லிங்கோற்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

     யாழ்முரிநாதர் எமன் உற்சவமூர்த்திகள் சிறப்பானவை.

     நாடொறும் நான்கு காலவழிபாடுகள். யாழ்முரிப் பதிகப் பாடல்.

     “மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
          நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
     பூதஇனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்
          அவர்படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
     வேதமொடு ஏழிசைபாடுவர் ஆழ்கடல் வெண்டிரை
          யிரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே
     தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறை வண்டறை
          யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.”
                                         (சம்பந்தர்)
    
                                - “நீக்குங்
     கருமபுரத்திற் கலவா தருள்செய்
     தருமபுரஞ் செய்தவமே.               (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. யாழ்முரிநாதர் தேவஸ்தானம்
     தருமபுரம் - (வழி) காரைக்கால் & அஞ்சல்
     புதுவை மாநிலம் - 609 602.

   தலம் - 35