பக்கம் எண் :

546 திருமுறைத்தலங்கள்


169/52. திருநள்ளாறு

     (1) காரைக்கால் - கும்பகோணம் சாலையில் காரைக்காலிலிருந்து 5
கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம்,
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு
அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.

     சிவத்தலமாயினும் இங்குள்ள சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி
பெற்றது. சனிபெயர்ச்சிக்கு இங்கு வந்து கூடும் மக்கள் ஆயிரக்கணக்காவர்.
நிடத நாட்டுமன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள்
தமயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான். தேவர்களைப்
புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன்மேல்
கோபம் கொண்டார். நளனிடம் ஏதும் குறைகாணாது 12 ஆண்டுகள்
காத்திருந்து, காலில் நீர்பட்டும் படாமலும்