பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 547


கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனைப் பற்றினார். இதனால் நளன் பட்ட
துன்பங்களை நாடறியும். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கியும் சனியின்
வேகந்தணியாமையின் தீர்த்தயாத்திரையை நாரதர் உபதேசப்படி
மேற்கொண்டான். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) அவனைச் சந்தித்த
பரத்வாஜ முனிவர், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார்.
அவ்வாறே நளன், திருநள்ளாறடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி,
இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துள் நுழைந்தான். அவனைப்
பற்றியிருந்த ‘சனி’ உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கிவிட்டார்.
இதனால் இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகவும் விசேஷமானதாகக்
கருதப்படுகின்றது.

     இத்தலம் சப்த விடங்கத்தலங்களுள் ஒன்று ஏனையவை :-

     1. திருவாரூர் 2. நாகப்பட்டினம் 3. திருமறைக்காடு 4. திருக்காறாயில்
5. திருவாய்மூர் 6. திருக்கோளிலி என்பன. இங்குள்ள தியாகராஜர் -
நகவிடங்கத் தியாகர் என்று அழைக்கப்படுகின்றனர். நடனம் - உன்மத்த
நடனம். திருஞானசம்பந்தர் அனல் வாதத்தில் எழுதியிட்ட ‘போகமார்த்த
பூண்முலையாள்’ என்னும் பதிகம் - பச்சைத் திருப்பதிகம் - இத்தலத்திற்குரிய
பாடலேயாகும். ‘சனி’யைப் பற்றிய வரலாறாவது :-

      “சூரியனுக்குச் ‘சஞ்ஞிகை’ என்றொரு மனைவியிருந்தாள். அவள்
துவட்டா என்பவனின் மகள். அவள் சூரியனுடன் கூடிவாழ்ந்து
‘வைவஸ்தமனு’வையும் யமனையும், யமுனை என்னும் பெண்ணையும்
பெற்றாள். பின்பு, சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல், தன்
நிழலையே ‘சாயாதேவி’ எனப் படைத்து கணவனை நீங்காமல் இருக்குமாறு
கூறித் தந்தை வீடு சென்றாள். தந்தை கடிந்து கொள்ளவே, கணவனிடம் வர
அஞ்சி வடதுருவம் சென்று குதிரை வடிவுடன் சூரியனை நோக்கித் தவம்
செய்திருந்தாள்.

     சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து, ‘சாவர்ணி’ என்ற மனுவையும்,
‘சனி’யையும், ‘பத்திரை’ என்ற பெண்ணையும் பெற்றாள். மூத்தாள்
பிள்ளைகளைச் சாயாதேவி கொடுமைப்படுத்தினாள். யமன் அவளைக் காலால்
உதைக்க முன்வர, அவளும் ‘அவன்கால் முறியுமாறு’ சாபமிட்டாள். சூரியன்
இதை அறிந்து, குணமடைய வரமளித்து, சாயாதேவியிடம் சென்று, அவள்
இன்னாள் என்பதை அறிந்து, ‘சஞ்ஞிகை’யைத் தேடிச் சென்றான். தவத்தில்
இருக்கும் அவளை அழைத்து வந்து இருமனைவியரோடும் இல்லறம்
நடத்தினான். மனுவை மன்னனாகவும், யமனைக் காலனாகவும், யமுனையை
நதியாகவும், சனியைக் கிரகங்களுள் ஒன்றாகவும் இருக்குமாறு செய்தான்.
‘சனி’யும் காசி