சென்று விசுவநாதரை வழிபட்டுத் தன், பதவிக்கு வேண்டிய வலிமையைப் பெற்றார். சனிபகவானுக்கு ‘மந்தன்’, ‘சனைச்சரன்’ என்னும் பெயர்களுண்டு. சனைச்சரன் என்பதே ‘சனீஸ்வரன்’ என்றாயிற்று. யமன் தன் இரண்டாந்தாயின் மீது கொண்ட கோபத்தால் சனியை அடித்தான். அதனால் ‘சனி’யின் கால் நொண்டியாயிற்று. தக்ஷயாகத்தில் ‘சனி’ ஒரு கண்ணையிழந்தார். ‘சனி’ பகவான் 4 கரங்களுடையவர். வலக்கைகளில் வர, தான முத்திரையும் பாம்புங் கொண்டவர். இடக்கைகளில் வில்லும் சூலமும் உடையவர். இவருக்கு கருநிறமுள்ள கழுகு வாகனமாகச் சொல்லப் பட்டிருந்தாலும் சில ஆகமங்களில் இவருக்குக் ‘காகம்’ வாகனமாகச் சொல்லப்பட்டுள்ளது. இவர் மனைவியின் பெயர் ‘ஜ்யேஷ்டாதேவி’. இவருக்குத் தானியம் எள், சமித்து - வன்னி, மலர் - கருநீலம், சுவை - கசப்பு, நண்பர்கள் - புதன், குரு, சுக்கிரன் ஆகியோர். பகைவர் - சூரியன், சந்திரன், செவ்வாய். சனிபகவான் நவக்கிரகங்களில் ஒருவர். ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆயுள் காரகனாக விளங்குபவர். ‘சனியைப்போலக் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை’ என்பது பழமொழி. ஆதலின் இவரை அனைவரும் பயபக்தியுடன் வழிபடுவர். இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகின்றார். இவருக்குத் தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ரநாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரமன், இந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். “நள்ளாறா என நம் வினை நாசமே” என்பார் அப்பர். இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீஸ்வரர். இறைவி - பிராணாம்பிகை, பிராணேஸ்வரி, போகமார்த்த பூண்முலையாள். தலமரம் - தர்ப்பை. தீர்த்தம் - நளதீர்த்தம். தலவிநாயகர்- சொர்ணவிநாயகர். மூவர் பாடலும் பெற்ற தலம். நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளோடு கூடிய ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் இடையன், |