பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 551


                         சனிபகவான் துதி

    
“பெருவாச நளனொடு வந்தவன் தீர்த்தமாடுதலாற் பெற்றபேற்றால்
    ஒருவா வந்தெம் பெருமானருள் பெற்று மிகவுமனம் உவகைபூப்பக்
    கருவாசல் புக்கார்போல் புகுந்தொளிரு நள்ளாற்றுக் கனக வச்ரத்
    திருவாசலிடனின்ற “மந்தன்” இரு செந்தளிர்த்தாள் சிந்தை
                                             செய்வாம்.”
                                           (தலபுராணம்)

                                    - “இருமையினும்
     எள்ளாற்றின் மேவாத வேற்புடையோர் சூழ்ந்திறைஞ்சும்
     நள்ளாற்றின் மேவிய என் நற்றுணையே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
     திருநள்ளாறு & அஞ்சல் - 609 607
     (வழி) மயிலாடுதுறை, காரைக்கால்.

170/53. கோட்டாறு.

கொட்டாரம்
   
     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் இவ்வூர் ‘கொட்டாரம்’ என்று வழங்கப்படுகிறது.

     1) காரைக்கால் - கும்பகோணம் சாலையில் திருநள்ளாறு தாண்டி,
அம்பகரத்தூர் சென்று, காளிகோயிலை அடைந்து ; அவ்விடத்திலிருந்து
பிரிந்து செல்லும் பாதை வழியாக - வயல் வழியாக 2 கி.மீ. நடந்து சென்று
இக்கோயிலை அடையலாம்.

     2) கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாகத் திருநள்ளாற்றுக்குப்
போகும் மயிலாடுதுறை - காரைக்கால், கும்பகோணம் - காரைக்கால்
பேருந்துகளில் சென்று ‘கொட்டாரம் கூட்ரோடில்’ இறங்கி 1 கி.மீ. நடந்து
இவ்வூரை (இக்கோயிலை) அடையலாம்.