பக்கம் எண் :

554 திருமுறைத்தலங்கள்


171/54. அம்பர்பெருந்திருக்கோயில்

அம்பர், அம்பல்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     தற்போது மக்கள் வழக்கில், அம்பர், அம்பல் என்று வழங்குகிறது.
நெடுஞ்சாலைத் துறையினரின் ஊர்ப்பலகையில் “அம்பல்” என்றே
எழுதப்பட்டுள்ளது. அம்பர் மாகாளத்திலிருந்து அதே சாலையில் மேலும் 1
கி.மீ. சென்றால் சாலையோரத்தில் உள்ள இக்கோயிலை யடையலாம். கோயில்
வரை பேருந்து செல்லும்.

     கோச்செங்கட் சோழனின் கடைசி திருப்பணியாகச் சொல்லப்படும்
இஃது மாடக்கோயிலாகும். பிரமன் வழிபட்டதலம். சோமாசிமாற நாயனார்
வசித்தபதி.

     இறைவன் - பிரமபுரீஸ்வரர்
     இறைவி - சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை.
     தலமரம் - புன்னை
     தீர்த்தம் - பிரமதீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது - பழமையானது. உள்ளே
சென்றால் விசாலமான இடைவெளி, சுதையாலான பெரிய நந்தி உள்ளது.
இடப்பக்கத்தில் உள்ள கிணறு “அன்னமாம் பொய்கை” என்று வழங்குகிறது.
பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில்
நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம்
பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது தலவரலாறு.

     படிக்காசு விநாயகர் சந்நிதியில் அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக
மூர்த்தங்கள் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி,
ஜம்புகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது.
நின்ற திருமேனி. சந்நிதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன்
சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்துப் படிகளேறி மேலே
சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட்
சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும்
உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறிய
வாயில் வழியாக உள்ளிருக்கும்