| மூலவரைத் தரிசிக்கலாம். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார். வலப்பால் நடராசசபை. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். உற்சவமூர்த்தங்களுள் (1) பிரம்மாவுக்கு காட்சிதந்த சுவாமி, நந்தியுடன் நின்றிருக்கும் பெரிய மூர்த்தம் (2) பிரம்மா (3) நால்வர் ஆகியவை தரிசிக்கத்தக்கன. மாசிமக நாளில் திருவிழா நடைபெறுகிறது. இத்தலத்திற்கு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தலபுராணம் பாடியுள்ளார். “சுங்கணி குழையினர் சாமம் பாடுவார் வெங்கனல் கனல்தர வீசியாடுவர் அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச் செங்கணலிறை செய்த கோயில் சேர்வரே.” (சம்பந்தர்) (செங்கணலிறை - கோச்செங்கட்சோழன்) - கூட்டாக “கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத் திருவம்பர் ஞானத் திரட்டே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில் அம்பல் & அஞ்சல் - (வழி) பூந்தோட்டம் - S.O. நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம் - 609 503. |