பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 559


                                             - ஒருவந்தர்
     மாகாளங்கொள்ள மதனைத் துரத்துகின்ற
     மாகாளத் தன்பர் மனோலயமே.           (அருட்பா)

     “காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும்
     பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
     ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
     மாகாளங் கைதொழுது வாழ்த்து”
                                 (ஐயடிகள் காடவர்கோன்)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில்
     கோயில் திருமாளம் - பூந்தோட்டம் அஞ்சல் - 609 503
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

173/56. திருமீயச்சூர்

174/57. திருமீயச்சூர் இளங்கோயில்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாகப்
பிரியும் காரைக்கால் பாதையிற் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும்
திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிதுதூரம் சென்றதும், கடைவீதியில் -
கடைவீதிக்கு இணையாகப் பின்புறமாகப் பிரிந்து செல்லும் ‘கம்பூர்’ பாதையில்
சென்று - ரயில்வே கேட்டைத் தாண்டி, சுமார் 2 கி.மீ. சென்றால் மீயச்சூரை
அடையலாம். சரளைக்கல்பாதை, கோயில்வரை வாகனங்கள் செல்லும்.
இக்கோயில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குரியது. மீயச்சூர்
கோயிலுக்குள்ளேயே இளங்கோயில் உள்ளது. மீயச்சூர் கோயில் சூரியன்
வழிபட்டது. இக்கோயில் விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

     இறைவன் - மேகநாதர், முயற்சிநாதர்
     இறைவி - சௌந்தர நாயகி, லலிதாம்பாள்
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - சூரியதீர்த்தம்