பக்கம் எண் :

56 திருமுறைத்தலங்கள்


     ஞானசம்பந்தர்   பாடலில் ‘திருவல்லம்  என்றும்;  அருணகிரிநாதரின்
திருப்புகழில் ‘திருவலம்’ என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

     கௌரி,  மஹாவிஷ்ணு,  சனகமுனிவர்  முதலியோர் வழிபட்டுப் பேறு
பெற்ற தலம். இவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

     இறைவன் - வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்
     இறைவி - தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை
         தலமரம் - வில்வம், கோயிலுள் உள்ளது.
     தீர்த்தம் - கௌரி தீர்த்தம், கோயிலுள் உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     கோயிலுக்கு முன்புள்ள மண்டப முகப்புடன் நான்கு   நிலைகளுடன்
கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. உள் நுழைந்ததும்   இடப்பால்
பிற்காலப் பிரதிஷ்டையான (திருவலம் மௌன சுவாமிகள் திருப்பணி செய்து
கட்டுவித்த) அம்பிகேஸ்வரர்  உடனாகிய  ராஜேஸ்வரி  ஆலயம்  உள்ளது.
இங்கு நாகலிங்கப் பூக்கள்  பூக்கும்  நாகலிங்க மரம் உள்ளது காணத்தக்கது.
வலப்பால் நீராழி மண்டபத்துடன் கூடிய கௌரி தீர்த்தம் உள்ளது.

     உள்   கோபுரம்  மூன்று   நிலைகளையுடையது.  இக்கோபுரம்  கல்
மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக
வரும்போது  உற்சவர்  மண்டபம்  உள்ளது.   பக்கத்தில்   காசிவிசுவநாதர்
சந்நிதியும்,  அடுத்து  சந்திரமௌலீஸ்வரர்  சந்நிதியும்  உள்ளன.  இவ்விரு
சந்நிதிகளும் சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன.
அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப்
பெரியது.   இதற்குப்   பக்கத்தில்  சதாசிவர்,   அனந்தர்,   ஸ்ரீ   கண்டர்,
அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.

     இதனை   அடுத்து  மிகச்   சிறியதான - பார்ப்பதற்கு   அழகான
‘சஹஸ்ரலிங்கம்’  உள்ளது.   ஆறுமுகர்  சந்நிதியில்  இருபுறமும் வள்ளி
தெய்வயானையும்,   நாகப்பிரதிஷ்டையும்,   மூலையில்   அருணகிரிநாதர்
உருவமும்  உள்ளன.  இதன்  பக்கத்தில்  குருஈஸ்வரர்,  விஷ்ணுஈஸ்வரர்,
விதாதா  ஈஸ்வரர்  என்னும்  பெயர்களைக்  கொண்ட    சிவலிங்கங்கள்
வரிசையாக உள்ளன. அடுத்துள்ளது வாகன மண்டபம்.

     இதற்கு   எதிரில்  “ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி”  -  தனிக்
கோயிலாகவுள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியது. இதன் எதிரில்