பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 561


     கோச்செங்கட்சோழன் கட்டியவை - மாடக்கோயில் எனப் பெயர்
பெறும்.)

     
“பொன்னேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்
     மின்னேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்
     தன்னேர் பிறரில்லானைத் தலையால் வணங்குவார்
     அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே.”   (சம்பந்தர்)

     “வேதத்தான் என்பர் வேள்வியுளான் என்பர்
     பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே
     கீதத்தான் கிளறும் திருமீயச்சூர்
     ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே."           (அப்பர்)

                                        ஓகாளக்
     “காயச்சூர் விட்டுக்கதிசேர வேட்டவர்சூழ்
     மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்
     களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
     இளங்கோயில் ஞான இனிப்பே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. மேகநாதர் திருக்கோயில்
     திருமீயச்சூர் & அஞ்சல் - 609 405.
     (வழி) பேரளம் - திருவாரூர் மாவட்டம்.
     நன்னிலம் வட்டம்.

175/58. திலதைப்பதி

செதலபதி - சிதலைப்பதி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திலதர்ப்பணபுரி என்னும் பெயரே திலதைப்பதி என்றாயிற்று.
இப்பெயரும் இன்று மக்கள் வழக்கில் உருச்சிதைந்து “செதலபதி” என்று
வழங்குகிறது. “செதலபதி” என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது.

     தலம் - 36