பக்கம் எண் :

562 திருமுறைத்தலங்கள்


     ஊர் - திலதர்ப்பணபுரி - கோயில் - மதிமுத்தம் - கோயில் உள்ள
இடம் “கோயிற்பத்து” ஆகும்.

     அரிசிலாற்றின் கரையில் உள்ள தலம். பிதிரர்களுக்குச் செய்ய
வேண்டிய சிராத்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்குரிய தலம்.

     1) மயிலாடுதுறை - திருவாரூர்ச் சாலையில் பூந்தோட்டம் வந்து,
அரிசிலாற்றுப் பாலங் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம் நாச்சியார்
கோயில் சாலையில் சென்று கூத்தனூரை அடைந்து, ஊர்த் தொடக்கத்தில்
உள்ள மரத்தினடியில் பேருந்தை நிறுத்திவிட்டு வலப்புறமாகச் செல்லும்
அரிசிலாற்றின் கரைமீது நடந்து செல்லவேண்டும். 2 கி.மீ. நடந்த பின்பு
இடப்புறமாக வரும் இறக்கத்தில் இறங்கி, மண் பாதையில் சிறிது தூரம்
நடந்து “செதலபதி” ஊரையடைந்து, ஊர்க்கோடியில் வலப்புறமாகச் செல்லும்
சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். (இத்தலத்திற்குப் பேருந்து
செல்லாது. ஆற்றின் கரைமீது