பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 565


                                       -“வளங்கோவை
     நாடுந் திலத நயப்புலவர் நாடொறும்
     பாடுந் திலதைப் பதி நிதியே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. முத்தீஸ்வரர் திருக்கோயில்
     திலதைப்பதி - பூந்தோட்டம் அஞ்சல் - 609 503
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

176/59. திருப்பாம்புரம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருமீயச்சூருக்குப் பக்கத்தில் உள்ளது.

     காரைக்கால் - கும்பகோணம் (வழி) பேரளம் - சாலையில் கற்கத்தி
வந்து அங்கிருந்து திரும்பி 2 கி.மீ. அச்சாலையில் வந்தால் ஊரையடையலாம்.
கோயில் வரை வண்டிகள் வரும்.

     நாகராசன் (ஆதிசேஷன்) வழிபட்ட தலம். பாம்பு + புரம் - பாம்புரம்
என்று மருவியது. சம்பந்தர் தம் பாடலில் பாம்புர நன்னகர் என்று
பாடுகிறார். இதன் வேறு பெயர்கள் (1) உரகபுரம் (2) சேஷபுரி என்பன.
நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு கேது போன்ற சர்ப்ப
தோஷங்கள் விலகவும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாக விளங்குகிறது.
இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு
வந்தாலும் சாதாரணமாகப் போய்விடும் - கடிப்பதில்லையாம். ஆதிசேஷன்
உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை
வேண்டி, உலகிற்கு வந்து, மஹா சிவராத்திரி நாளில் முதற்காலத்தில்
குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாங் காலத்தில் திருநாகேச்சுரம்
நாகராதரையும், மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும்,
நான்காங் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளம்
பெற்றான் என்பது தலவரலாறு. இத்தலத்தில் நாகராஜனுக்கு மூல, உற்சவ
விக்ரஹங்கள் உள்ளன.