சோழநாட்டு (தென்கரை)த் தலம். 1. பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் வந்து, அரசலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம், நாச்சியார்கோயில் சாலையில் சென்று, கடகம்பாடி என்னும் ஊரையடைந்து, அங்கிருந்து வலப்புறமாகப் பிரிந்து சிறுகுடிக்குச் செல்லும் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் ஊரையடையலாம். ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. இப்பிரிவுச் சாலையில் சைக்கிளில் (அ) நடந்து செல்லலாம். பஸ் போகாது. சிறிய சிறிய வளைவுகள் கொண்ட சரளைக் கல் பாதை. எனவே பஸ்ஸில் போக முயற்சிக்கத் தேவையில்லை. 2. தனியே வருவோர் கடகம்பாடியில் வாடகை சைக்கிள் பெற்றுக் கொண்டு செல்லலாம். கோயிலும், பக்கத்தில் குருக்கள் வீடும் ஊர்க்கோடியில் தனியே உள்ளன ; வழிகேட்டுச் செல்ல வேண்டும். ஊர்ப்பெயர் ‘சிறுகுடி’யானாலும், கோயில் நன்கு பொலிவோடு திகழ்கிறது. சங்க இலக்கியத்தில் |