பக்கம் எண் :

572 திருமுறைத்தலங்கள்


     இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும்
திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.
‘தில்லை மூவாயிரவர்’ என்பது போல இத்தலத்து வாழ்ந்த ஐந்நூறு
அந்தணர்கள் (வீழி ஐஞ்ஞூற்று அந்தணர்) போற்றப்பட்டனர். இத்திருக்
கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது. இத்தலத்துத்
தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்த்திகளான
ஸ்ரீ மறைஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால்
இயற்றப்பட்டது - உள்ளது. இக்கோயிலில் உள்ள வௌவால் நத்து
(வாவல்நெற்றி) மண்படம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும்.

     கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் சில தலங்களில் உள்ள
அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில் இம் மண்டபமும்
ஒன்றாகும். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரம் கடந்து
நுழைந்தவுடன் வௌவால் நத்திமண்டபம் - கல்யாணமண்டபம் உள்ளது.
அகலமான அமைப்பு - நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு
ஒட்டப்பட்டுள்ள அமைப்பு - பார்ப்பவரை வியக்கச் செய்யும். இரண்டாம்
கோபுரத்தைக் கடந்ததும், வெளிச்சுற்றில், படிக்காசு வைத்தருளிய பலி
பீடங்கள் உள்ளன. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப்
பிராகாரத்தில் தலவிநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில்
சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர்
சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது.

     சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது.
இவ்விமானம், திருமால் கொணர்ந்தது என்பதனை “தன்றவம் பெரிய
சலந்தனுடலந் தடித்த சக்கிரம் எனக்கருள் என்று அன்று அரி வழிபட்டு
இழிச்சிய விமானத்து இறையவன் பிறையணி சடையவன்” என்னும்
ஞானசம்பந்தர் வாக்கால் அறியலாம். செப்புத் தகடுகள் வேயப்பெற்றுத்
தங்கக்கலசத்தோடு விளங்கும் இவ்விமானம் தனி அழகுடையது. பதினாறு
சிங்கங்கள் தாங்கும் தனிச்சிறப்புடையது. கர்ப்பகிருக விமானத்தில்
ஞானசம்பந்தர் கண்ட சீகாழிக் காட்சி சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

     மூலவரின் (வீழிநாதேசுரரின்) பின், இறைவன் உமையோடு உள்ள
திருமணக்கோலமுள்ளது. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம்
என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும்
தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன.
மகாமண்டபத்தில் - தனி