விடங் கொண் மாமிடற்றீர் வெள்ளைச் சுருளொன்றிடுவிட்ட காதினீர் என்று திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை மடங்கல் பூண்ட விமான மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும் அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. (சுந்தரர்) ‘பங்கயம் ஆயிரம் பூவினி லோர் பூக் குறையத் தங்கண் இடந்துஅரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கருளிய வா(று) எங்கும் பரவிநாம் தோணாக்கம் ஆடாமோ’. (திருவாசகம்) ‘ஒழிவில் உயிர்கட்கு உயிராய்க் குணங்களின்றி உருவருவ மென்றின்றி மலமொன்றின்றி அழிவில் வியாபகமா யானந்த ரூப மாய்விளங்கும் பரம் பொருள்தான் அருளினாலே பழுதில் அரிபூசை கொள்வானருளு ருக்கொள் எந்தை பக்தியுடன் கமலம்போல் அவன் இடந்து சாத்தும் விழி மருவும் வீழிமிழலை மேவும் விண்ணிழிந்த நாயகன் சீர் விளம்பி உய்வாம்.’ (தலபுராணம்) “காரணகாரியங் கடந்த இபமுகன் பாரதத்தைக் கனககிரிதனில் வரைந்தகோடுடைய எந்தை ஏருறு நற்றமிழ்வேத மாகிய பாமாலை இசையுள கொற்குருகி உளமிறைஞ்சி நின்றே சாத்திச் சீருறு சம்பந்தருக்கும் அப்பருக்கும் மிரங்கித் தீவினைக் காலத்திவணுற் றின்புறுதிர் என்றே பாரறிய அநுதினமும் வீழிநகர் தனின் முன் படிக்காசு வைத்த கணபதி யிருதாள் பணிவாம்.” (தலபுராணம்) - முன்அரசும் காழிமிழலை யருங்கண்டு தொழக் காசளித்த வீழிமிழலை விராட்டுருவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில் திருவீழிமிழலை & அஞ்சல் - 609 505 தஞ்சை மாவட்டம். |