நிற்குமிடத்தில் கருவிலி வழி காட்டிப் பலகை உள்ளது. கோனேரி ராஜபுரத் (திருநல்லம்) திற்குப் பக்கத்தில் உள்ள தலம். கோயில் - கொட்டிட்டை. ஊர் : கருவிலி. இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டது. சோழர்களின் திருப்பணி பெற்ற தலம். பழைமையான கோயில். இறைவன் - சற்குண நாதேஸ்வரர் இறைவி - சர்வாங்க நாயகி தீர்த்தம் - எமதீர்த்தம் (எதிரில் உள்ளது) அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் கோயில் தனிக்கோயிலாக இடப்பால் உள்ளது. அம்பிகைத் திருமேனி பெரியது. அழகானது. பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள நர்த்த விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன. கல்வெட்டில் இத்தலம் “உய்யக்கொண்டான் வளநாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்க சோழநல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை” என்று குறிக்கப்படுகிறது. 27.3.1997ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நித்திய வழிபாட்டு டிரஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலம் - 37 |