“வாடிநீர் வருந்தாதே மனிதர்காள் வேடனாய் விசயற்கு அருள் செய்த வெண் காடனார் உறைகின்ற கருவிலிக் கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே” (அப்பர்) - “இந்நிமிடஞ் சிந்துங் கருவிலியின் திண்மை யென்று தேர்ந்தவர்கள் முந்துங் கருவிலி வாழ் முக்கண்ணா.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சற்குண நாதேஸ்வரர் திருக்கோயில் கருவேலி. கூந்தலூர் அஞ்சல் - எரவாஞ்சேரி - S.O. கும்பகோணம் R.M.S. தஞ்சை மாவட்டம் 605 501. 181/64. பேணுபெருந்துறை திருப்பந்துறை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப் பாதையில் அமைந்துள்ள தலம். (நாச்சியார் கோயிலையடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.) கோயில் வரை வாகனங்கள் செல்லும். அரிசிலாற்றின் கரையிலுள்ள ஊர். ‘திருப்பெருந்துறை’ யினின்றும் வேறுபாடறிய ‘பேணு’ என்னும் அடைசேர்த்துப் ‘பேணு பெருந்துறை’ என்று வழங்கப்படுகிறது. இறைவன் - சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர். இறைவி - மங்களாம்பிகை, மலையரசி. தலமரம் - வன்னி. தீர்த்தம் - மங்கள தீர்த்தம். எதிரில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. |