பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 587


வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினாள். இறைவன் மகிழ்ந்து
தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக்
குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில்
ரத்தத்துளி இருப்பதைக் காணலாம்.

     தாயாக வந்த இந்திராணியும் - தந்தையாக வந்த இந்திரனும் -
குழந்தையாக வந்த அக்னியும் கிழக்குப் பிராகாரத்தில் சிவலிங்கத் திருமேனி
தாங்கி இருப்பதாகவும் கூறுவர்.
                                  (ஆதாரம் - கோயில் வரலாறு)

     
“சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
     உருவிய லுலகவை புகழ்தர வழி யொழுகுமெயுறு பொறியெரழி
     அருதவ முயல்பவர் தனதடியடை வகை நிலையரனுறை பதி
     திருவயர் சிவபுர நினைபவர் திகழ்குலனில னிடைநிகழுமே.”
                                               (சம்பந்தர்)

     ‘பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண்
          பயிர் வளர்க்குந் துளியவன்காண் துளியினின்ற
     நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான்காண்
          நிலவேந்தர் பரிசாகநினைவுற் றோங்கும்
     பேரவன்காண் பிறைஎயிற்று வெள்ளைப் பன்றி
          பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்
     சிரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
          சிவனவன்காண் சிவபுரத்துஎம் செல்வன்தானே.”
                                                 (அப்பர்)

     “ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
     செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி.”
                               (திருவாசகம் - போற் திருவக)

                     - தரிசனத்தெக்     
     காலஞ்சிவ புரத்தைக் காதலித்தோர் தங்கமுதி
     யேலுஞ் சிவபுரத்தில் எம் மானே.             (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
     சிவபுரம் - சாக்கோட்டை அஞ்சல் - 612 401
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.