பக்கம் எண் :

60 திருமுறைத்தலங்கள்


திருப்புகழ்

     நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
         நடு நடுவே யென்                - புறுகீலும்
     நலமுறு வேயொன்றிட இரு கால்நன்
         றுற நடையாருங்                 - குடிலூடே
     விசையுறு காலம் புலனெறியேவெங்
         கனலுயிர் வேழந்                 - திரியாதே
     விழுமடியார் முன்பழு தறவேள்கந்
         தனுமென வோதும்               - விறல்தாராய்
     இசையுறவே யன்றசை வறவூதும்
         எழிலரிவேழம்                   - எனையாளென்
     றிடர் கொடுமூலத் தொடர்வுடனோதும்
         இடமிமையாமுன்                 - வருமாயன்
     திசைமுக னாருந் திசைபுவி வானுந்
         திரிதர வாகுஞ்                  - சிவன்மூதூர்
     தெரிவையர் தாம்வந் தருநடமாடுந்
         திருவல மேவும்                 - பெருமாளே.

                          -பார்த்துலகில்

     இல்லமெனச் சென்றிரவாதவர் வாழும்
     வல்லம் மகிழ்வன்பர் வசித்துவமே.       (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    
    
அ/மி. வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்
     திருவலம் & அஞ்சல்
     (வழி) இராணிப்பேட்டை - குடியாத்தம் வட்டம்.
     வேலூர் மாவட்டம் - 632 515.

11. திருமாற்பேறு

திருமால்பூர்

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘திருமால்பூர்’ என்று வழங்குகின்றது.

     (1) சென்னையிலிருந்து நேரே பேருந்து செல்கிறது. ஆனால் அடிக்கடி
இல்லை. நேரம் விசாரித்துச் செல்ல வேண்டும்.