(2) காஞ்சிலிருந்து அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. இவ்வழியே எளிதானது. (3) அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் ஒரு இருப்புப்பாதை நிலையம். இப்பாதை தற்போது அகலப் பாதையாக (Broad Gauge) மாற்றப்பட்டுள்ளது. நிலையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. உள்ளே சென்றால் ஊரையடையலாம். திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். எனவேதான் ‘மாற்பேறு’ என்னும் பெயர் பெற்றது. திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகின்றது. அதாவது திருமால், நாடொறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபட்டாரென்றும், ஒரு நாள் மலர் ஒன்று குறைய, தம் கண்ணையே பறித்து மலராக இட்டு அர்ச்சித்து அருள் பெற்றார் என்பதும் வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்ராயுதமான ‘சுதர்சனத்தை’த் திரும்பப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று, ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் ‘கண்’ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம். கோயில் ஊர்நடுவே உள்ளது. கோயிலுக்கு நேர் எதிரில் வீதியின் மறுமுனையில் விநாயகர் கோயில் உள்ளது. திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு ‘ஹரிசக்ரபுரம்’ என்றும் பெயர். சந்திரன் வழிபட்ட தலம். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். இறைவன் - மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், (மணிகண்டேஸ்வரர் என்னும் திருப்பெயரே வழக்கில் உள்ளது.) இறைவி - அஞ்சனாட்சி, கருணாம்பிகை. தலமரம் - வில்வம் தீர்த்தம் - சக்கர தீர்த்தம். (கோயிலுக்கு வெளியில் பக்கத்தில் புதர்மண்டிப் பயனின்றி உள்ளது.) ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. சிற்பங்களில்லை. சிற்பத் தூண்கள் அமைப்பில் உள்ளது. பழமையான கோபுரம். முகப்பில் வலம்புரி விநாயகர் உள்ளார் ; வயிற்றுப் பகுதி |