பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 607


     எண்ணுகேன் என்சொல்லி எண்ணி கேனோ
          எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
     கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
          கழலடியே கைதொழுது காணின் அல்லால்
     ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
          ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
     புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
          பூம்புகலூர் மேவிய புண்ணியனே.          (அப்பர்)

 “தம்மையே புகழ்ந் திச்சைபேசினும் சார்வினுந் தொண்டர் தருகிலாப்
  பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர்பாடுமின்புலவீர்காள்
  இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம்
  அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே”
                                          (சுந்தரர்)

                 புகலூர் வர்த்தமானீச்சரம்

    “ஈசன் ஏறமர்கடவுள் இன்னமுது எந்தை எம்பெருமான்
     பூசுமாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில்
     மூசுவண்டறை கொன்றை முருகன்முப்போதுஞ் செய்முடிமேல்
     வாசமாமல ருடையார் வர்த்த மானீச்சரத்தாரே.”    (சம்பந்தர்)

                                   - சொற்கெசடிய
     வன்புகலா நெஞ்சில் மருவுமொரு தகைமைத்
     தென்புகலூர் வாழ்மகாதேவனே - இன்பமறை
     அர்த்தமா நீக்கரிய ஆதாரமாநின்ற
     வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. அக்கினிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
     திருப்புகலூர் & அஞ்சல் - 609 704
     (வழி) திருக்கண்ணபுரம் - S.O.
     நாகப்பட்டினம் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.