மார்கழித் திருவாதிரை, சஷ்டி, தைப்பூசம் முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இவ்வூரில் உள்ள அ/மி.சௌரிராசப் பெருமாள் கோயில் சிறப்பு வாய்ந்தது. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. கல்வெட்டில் சுவாமியின் பெயர் ‘இராமனதீச்சர முடையார்’ என்று காணப்படுகின்றது. குலோத்துங்கன் இக்கோயிற்பூசைக்காகச் ‘சிவபாதசேகர மங்கலம்’ என்னும் பெயருடைய நிலப்பகுதியைத் தானமாக அளித்த செய்தி இக்கல்வெட்டால் தெரியவருகிறது. “சரிகுழல் இலங்கிய தையல் காணும் பெரியவன் காளிதன் பெரிய கூத்தை அரியவனாட லோனங்கை யேந்தும் எரியவனிராமன தீச்சரமே.” (சம்பந்தர்) - “மித்தையுற்ற காமனதீசங்கெடவே கண்பார்த்தருள் செய்த ராமனதீசம்பெறு நிராமயனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. இராமனதீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்ணபுரம் & அஞ்சல் - 609 704 நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 195/78 திருப்பயற்றூர் திருப்பயத்தங்குடி | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் ‘திருப்பயத்தங்குடி’ என்றழைக்கின்றனர். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துச் சாலையில் கங்களாஞ்சேரியை அடைந்து, அதையடுத்து வலப்பக்கமாகப் பிரிந்து செல்லும் நாகூர் சாலையில் சென்று, மேலப்பூதனூர் அடைந்து அங்கிருந்து பிரியும் திருமருகல் சாலையில் சென்றால் திருப்பயத்தங்குடியை அடையலாம். (இத்தலத்தையடுத்து செங்காட்டங்குடியும் தலம்-39 |