“தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழுலகு உடனுமாகி எந்தை யெம்பிரானே என்றென்று உள்குவார் உள்ளத்தென்றும் சிந்தையும் சிவமுமாவர் திருப்பயற் றூரனாரே." (அப்பர்) - “கோமுண் மயற்றூர் பறிந்த மனத்துள் விளைந்த பயற்றூர் திசை அம்பரனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. முக்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி & அஞ்சல் (வழி) கங்களாஞ்சேரி S.O. - 609 701. நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.
196/79. திருச்செங்காட்டங்குடி | சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருவாரூர் - திருமருகல் சாலையில், ‘செங்காட்டங்குடி’ என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக வந்து, திருமருகல் கால்நடை மருந்தகத்தைத் தாண்டி, பாதை வழியே 3 கி.மீ. சென்றால் தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிறுத் தொண்டர் நாயனார் அருள் பெற்ற தலம். கணபதி இறைவனை வழிபட்டதால் கணபதீச்சரம் என்று கோயிலுக்குப் பெயர். விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் ‘செங்காட்டங்குடி’ என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், |