பிரதிஷ்டை செய்துள்ளார். (வாதாபி கணபதி) இக்கோயிலுக்கு மந்திரபுரீசம், கணபதீச்சரம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம் எனப் பல பெயர்களுண்டு. இறைவன் - உத்தராபதீஸ்வரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீஸ்வரர். இறைவி - சூளிகாம்பாள் (குழலம்மை.) தலமரம் - ஆத்தி. தீர்த்தம் - தீர்த்தக்குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது. அவை- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன. சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். ஊரின் நடுவில் கோயில் உள்ளது. இராசகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - கிழக்கு நோக்கியது. கோயில் வாயிலில் உள்ள திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். குளக்கரையில் ‘மங்களவிநாயகர்’ எழுந்தருளியுள்ளார். ராசகோபுரத்தின் உட்பக்கம் ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலம் - கவசமிட்ட கொடிமரம் தாண்டி, உட்பிராகாரத்தில் பிட்சாடனர் கல்லில் வடித்துள்ள கோலத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திருவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும், அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். தலமரம் ‘ஆத்தி’ உள்ளது. பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபிகணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி, அவர் பூசித்த இலிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுடையவை - இம் மண்டபத்தில் |