பக்கம் எண் :

616 திருமுறைத்தலங்கள்


     அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை
          அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்
     திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்
          செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. (அப்பர்)

                                        - “ இயற்றுஞ்சீர்
     ஆச்சிரமேவுஞ் செங்காட்டங்குடியின் அங்கணப
     தீச்சரம் வாழுஞ் சந்திரசேகரனே.”           (அருட்பா)

 சூதாவி நீலநிகர் முலைவிழிவல் லபையணைந்து தொண்டர்செய்தி
 ஓதாமுன் பொன்னிநதி கொணர்ந்துசிவன் பாதத்தை உன்னிச்செய்தி
 தீதாவி செவிகவருந் தீங்குழலோன் விழியளித்துச் செல்வநல்கும்
 வாதாவி மதக்களிற்றின் பதயுகத்தா மரையுளத்தில் வைத்து வாழ்வாம்.

  சீர்தந்த நவப்பொருளா யெண்வடிவா யேழிசையாய்த் திகழாதாரஞ்
  சார்தந்த வாறாக யைந்தெழுத்தாய் நான்மறையாய்ச் சாத்துகாதிப்
  பேர்தந்த முக்குணமா யிருசுடரா யொருமுதலாய்ப் பெருகா நின்ற
  கார்தந்த ஆத்திவனக் கணபதீச் சரத்தானைக் கருத்துள் வைப்பாம்.

 கங்காட்டுங் கரங்களத்துக் கறைகாட்டும் பிறைமவுலிக் கடவுள் மாலோ
 டங்காட்டு நான்முகனை ஐங்கரனை அறுமுகனை அளித்தபேதை
 சங்காட்டும் புனற்கரஞ்சேர்க் காவேரி வளங்காட்டுந் தமிழ்நன்
                                               னாட்டிற்
 செங்காட்டங் குடிவாய்த்த திருக்குழலி உபயபதஞ் சென்னி சேர்ப்பாம்

 பனியுண்ணா தகல்விசும்பிற் பரிதிதேர் தடுத்தமலை பதித்த கும்ப
 முனியுண்ணா கடலினெழு விடந்தொடர முண்டகன்மால்
                                         முறையிட்டோட
 நனியுண்ணா துயிரளித்து நரமதலைக் கறிவேட்டு நல்லோ ரின்றித்
 தனியுண்ணா வைரவனார் சிலம்பார்க்க நடந்தமலர் சரணஞ் சார்வாம்.

     கடிக்கமலஞ் சூழ்புவியில் மறையவராம்
          வாதாவிக் கடிந்து மன்னாற்
     படிக்கமல மறவடியார்க் கனம்படைத்தோர்
          சீராளற் பயந்த நங்கை
     பிடிக்கமலங் காதரிந்து சமைத்தகறி
          வயிரவராம் பெருமாற்கீந்தே
     அடிக்கமலங் குடிபெறுநற் பரஞ்சோதி
          சிறுத்தொண்டர்க் கன்புசெய்வாம்