பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 617


  மருங்காட்டு மறவாளர் விரும்பு முடற் சீராளன் மலர்க்காலாதி
 ஒருங்காட்டுத் தலைக்கறிசெய் சந்தனத்தார் சரண மெலா வுலகுங்
                                                    கூட்டி
 நெருங்காட்டு திங்கள்விழா வொலிகூரு முகிலூரு நெடிய கன்னற்
 கருங்காட்டுச் செங்காட்டு வெண்காட்டு நங்கைபதக் கமலஞ் சேர்வாம்

 காரேழுந் தடுத்தசிறு கண்ணனெனக் காசினியோ ரேவரும் போற்றப்
 பாரேழும் படைத்தளிக்கும் ஒருமுதற்குப் பசிதீர்க்கு மருந்தாய் நின்றே
 நீரேழு கலங்கிடினு நிலையலையான் றுணியுமென நிகழ்த்துஞ் செல்வச்
 சீராளப் பிள்ளையிரு சிறுசதங்கை பதமெமது சென்னி சேர்ப்பாம்.
                                          (தலபுராணம்)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்
     திருச்செங்காட்டங்குடி - திருக்கண்ணபுரம் அஞ்சல்
     நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம் 609 704

197/80. திருமருகல்

     சோழநாட்டுத் (தென்கரை)த் தலம்.

     திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள தலம். திருவாரூர்,
நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து
இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.

     ‘மருகல்’ என்பது ஒருவகை வாழை. இது ‘கல்வாழை’ என்றும்
சொல்லப்படுகிறது. இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம்
‘திருமருகல்’ என்று பெயர் பெற்றது.

     கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் (யானையேறாப்
பெருங்கோயில்களுள்) இதுவும் ஒன்று. பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை,
ஞானசம்பந்தர் ‘சடையாய் எனுமால்’ பதிகம் பாடி எழுப்பியருளிய தலம்.
இவ்வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றில்
சேக்கிழார் பெருமான் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். இவ்வரலாற்றுச் சிற்பம்
கதையில் இராச கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது.