- “திண்மைகொண்ட மாத்தமங்கையுள்ள மருவிப்பிரியாத சாத்தமங்கை கங்கைச் சடாமுடியோய்.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அயவந்தீஸ்வரர் திருக்கோயில் சீயாத்தமங்கை & அஞ்சல் - 609 702 நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 199/82. நாகைக்காரோணம் நாகப்பட்டினம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய பல ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. தஞ்சை - நாகூர் இருப்புப் பாதையில் உள்ள இருப்புப்பாதை நிலையம். சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய நகரம். நாகப்பட்டினம் நாகூர் இரண்டும் ஒன்றையொன்று அடுத்து உள்ளன. நாகர்கள் என்ற வகுப்பினர்கள் குடியேறி வாழ்ந்ததால் இப்பகுதி நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது. (கடற்கரையை அடுத்துள்ள ஊர்-பட்டினம்) துறைமுகப் பட்டினம். உரோமானிய, சீனவாணிகம் பண்டைநாளில் இத்துறைமுகம் வாயிலாக நடந்து வந்தது. பிறநாட்டு வணிகர்கள் இத்தலத்தில் வந்து நிறைந்திருந்தனர் என்று தெரிகின்றது. நாகப்பட்டினம் என்பது மருவி ‘நாகை’ என்று வழங்கலாயிற்று. புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட பெருமை பெற்ற பதி. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. அகத்தியருக்குத் திருமணக் காட்சியருளியதும், அதிபத்தநாயனார் அவதரித்ததுமாகிய சிறப்பு கொண்ட தலம். ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்பன இதற்குரிய வேறு பெயர்கள். ஆதிசேஷன் பூசித்ததாக வரலாறு. ஊர் - நாகப்பட்டினம். கோயில் - காரோணம். |