இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் இறைவி - நீலாயதாக்ஷி தலமரம் - மா தீர்த்தம் - 1) புண்டரீக தீர்த்தம் (கோயிலின் மேற்கில் உள்ளது.) 2) தேவ தீர்த்தம் (முத்தி மண்டபம் அருகில் உள்ளது.) தியாகராஜா - சுந்தரவிடங்கர் நடனம் - தரங்கநடனம் மூவர் பாடல் பெற்றது. ஊர் நடுவே கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயில் நுழைந்ததும் சிறப்பு மூர்த்தியாகிய நாகாபரணப் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். பலிபீடம் நந்தி உள்ளன. சுதையாலான பெரிய நந்தி. ஐந்துநிலை கோபுரத்தைக் கடந்தால் ராசதானி மண்டபம் - கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. பிராகாரத்தில் அதிபத்த நாயனார், வல்லபகணபதி, அகோரவீரபத்திரர், ஆத்மலிங்கம், பிள்ளையார், பழனியாண்டவர், இடும்பன் சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்து ராஜதானி மண்டபம் சென்றால் விநாயகர், ஆறுமுகர் (வள்ளி தெய்வயானையுடன் மயில் மீதமர்ந்துள்ள பெரியமூர்த்தி), காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். இம்மண்டபத்தில் வலப்பால் நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) சந்நிதி உள்ளது - நின்ற திருக்கோலம். துவாரபாலகரைக் கடந்து ஒருபுறம் உள்ள விநாயகரையும் மறுபுறம் உள்ள அதிகார நந்தியையும் தொழுது உட்சென்றால், சூரியன், அறுபத்து மூவர், மாவடிப்பிள்ளையார், வெண்ணெய்ப் பிரான், அருணாசலேஸ்வரர், பைரவர், கஜலட்சுமி ஆகியோரைத் தொழலாம். நவக்கிரகங்களுள் சனீஸ்வரர் தனியே உள்ளார். நவக்கிரகங்கள் வரிசைக்கு மூன்றாக மூன்று வரிசைகளில் ஒரே திசையை நோக்கி - சுவாமியை நோக்கியவாறு உள்ளன. நடராசசபையைத் தொழுது உள்வலமுடித்துப் படிகளேறிச் சென்றால் மண்டபத்தில் வலப்பால் உற்சவ மூர்த்தங்கள் 1) பிட்சாடனர் 2) நடராசர் 3) சிவகாமி 4) காட்சிநாயகர் ஆகியவை வரிசையாக உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் - நெற்றிப்பட்டத்துடன் அழகாகக் காட்சி தருகிறன்றார். பெரிய பாணம் - காயாரோகணர். பின்னால் தனிமாடத்தில் இறைவன் இறைவி |