‘தடிகடற் புகுதல் போலச் சைவமாம் கடலிற் புக்கு முடிவலை வீசல் போல முதிர்பத்தி வலையை வீசி நெடியமீன் கவர்தல் போல நிராமய உமையோர் பாகத்(து) அடிகளாம் மீன்க வர்ந்த அதிபத்தர்க் கன்பு செய்வாம்’ (தலபுராணம்) திருப்புகழ் ஓலமிட்டு ரைத்தெழுந்த வேலைவட்ட மிட்டவிந்த ஊர்முகிற்ற ருக்களொன்றும் அவராரென் றூமரைப்ர சித்தரென்றும் மூடரைச்ச மர்த்தரென்றும் ஊனரைப்ர புக்களென்றும் அறியாமல் கோலமுத்த மிழ்ப்ரபந்த மாலருக்கு ரைத்தனந்த கோடியிச்சை செப்பிவம்பில் உழல்நாயேன் கோபமற்று மத்துழன்ற மோகமற்று னைப்பணிந்து கூடுதற்கு முத்தியென்று தருவாயே வாலைதுர்க்கை சத்தியம்பி லோககத்தர் பித்தர்பங்கில் மாதுபெற்றெ டுத்துகந்த சிறியோனே வாரிபொட்டெ ழக்ரவுஞ்சம் வீழநெட்ட யிற்றுரந்த வாகை பொற்பு யப்ரசண்ட மயில்வீரா ஞாலவட்ட முற்றவுண்டு நாகமெத்தை யிற்றுயின்ற நாரணற்க ருட்சுரந்த மருகோனே நாலுதிக்கும் வெற்றிகொண்ட சூரபத்ம னைக்களைந்த நாகபட்டி னத்தமர்ந்த பெருமாளே. க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ் தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர் சச்சிதா னந்தசாந்தர் தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள் தருமட்ட வித்தியேசுரர் பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்தும் பேதமா மாகேசுரர் பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல் பிருங்கியுட னைங்கரத்தோன் தலம் - 40 |