- “ஓகையற விக்கல் வருங்கால் விடாய் தீர்த்துல கிடைநீ சிக்க லெனுஞ்சிக் கற்றிறலோனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. நவநீதேஸ்வரர் திருக்கோயில் சிக்கல் & அஞ்சல் (வழி) நாகப்பட்டினம். நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம். 611 108
201/84. கீழ்வேளூர் கீவளூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் கீவளூர் என்று வழங்குகின்றனர். திருவாரூர் - நாகப்பட்டினம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. (இவ்வூரையடுத்து இதே சாலையில் ‘சிக்கல்’ தலமுள்ளது.) அகத்தியருக்கு வலதுபாத தரிசனம் தந்த தலம். ஆதிசேஷன், வசிட்டர், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. பதரிகாரண்யம் (இலந்தைமரக்காடு) என்னும் பெயருண்டு. முருகப்பெருமான் வழிபட்ட பதி. அவர் வழிபட்ட போது அதற்கு இடையூறு நேராதவாறு ஐந்து திக்குகளிலும் காவல்புரிந்த “அஞ்சு வட்டத்தம்மன் காளி கோயில்” இங்குச் சிறப்புடையதாக வழிபடப் படுகின்றது. அகத்தியருக்குக் காட்சிதந்த நடராசர் அழகானமூர்த்தம் - தாண்டவபேதம் தரிசிக்கத்தக்கது. இறைவன் - கேடிலியப்பர், அக்ஷயலிங்கேஸ்வரர் இறைவி - சுந்தரகுஜாம்பாள், வனமுலைநாயகி தலமரம் - இலந்தை தீர்த்தம் - சரவணதீர்த்தம் தலவிநாயகர்- பதரிவிநாயகர் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. |